இனவழிப்பின் தொடக்கம் யாழ்ப்பாணம் நூலக எரிப்பு.


இனவழிப்பு என்றால் வெறுமனே மனிதனை கொல்வதுமட்டுமல்ல;
ஒரு இனத்தின் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்புக்களை சிதைப்பது, பலவந்தமாக இனக்கலப்புச் செய்வது, வரலாறுகளை சிதைப்பது, அத்துமீறிய குடியேற்றத் திட்டம் என பல இருக்கிறது.அதற்கு ஒரு வகைமாதிரியான எடுத்துக்காட்டுதான்
‚யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு‘
இந்த கொடுஞ்செயல் இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது.சிப்பாய்கள் ,காவல்த்துறை மற்றும் குண்டர்களின் இக் கூட்டுச் செயலானது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.
இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது
இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் ‚காமினி திசாநாயக்கா‘ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இக் கோரச் சம்பவத்தில் தமிழரின் விலைமதிக்கமுடியாத பாரம்பரியங்கள் சிதைவடைந்துபோனதோடு 4 உயிர்களும் எரியுண்டு மாண்டனர்..
புராதன யாழ்ப்பாண கல்விமான்களின் மருத்துவ அரசியல் ,, சாஸ்திர, இலக்கியம் சார்ந்த ஓலைச் சுவடிகளும் 1800களில் வெளியிடப்பட்ட பல்வேறு சஞ்சிகைகள் பத்திரிகைகளின் மூலப்பிரதிகளும் எரியுண்டு போயின..
தமிழரின் பாரம்பரியங்களை கூறுகிற வரலாற்று ஆதாரங்களை அழிக்கின்றதன் மூலம்
எம் இனத்தை விரைவில் சிதைக்கமுடியும் எனும் தீய கொடுஞ்செயலை நிகழ்த்திக்காட்டியவர்களாக காமினி திசாநாயக்கா சார்ந்த இனவழிப்பு கும்பல் இன்றளவும் மன்னிக்கமுடியாத எதிரிகளாக முன்நிற்கிறார்கள்.
எமது பாரம்பரியத்தை ஆதாரபூர்வமாக நிரூபிக்க
வரலாற்றை மீளாய்வுக்கு உட்படுத்தக்கூடிய வாய்ப்புகளை இந்த நூலக எரிப்போடு இழந்தமைதான் சோகத்திலும் சோகம்
இதையெல்லாம் பார்கிற பொழுது எந்தக்காலத்திலும் தனித்தீவில் இரு இனம் நல்லிணக்கத்துடன் வாழ்தல் என்பது சாத்தியமற்றது.
1933 ம் ஆண்டு நிறுவப்பட்ட நூலகத்தின் முதல் கட்டடம் 1959ம் ஆண்டு நிறுவப்பட்டது
ஆரம்பகாலங்களிலிருந்து பல்வேறு தனிநபர்களதும் பல்தேசிய அறிஞ்ஞர்களினதும் நன்கொடையாக பெருமளவு நூல்கள் இங்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் மனதில் முள்ளிவாய்க்கால் அவலம்போல என்றுமே மாறாதவடுவாக யாழ் நூலக எரிப்பும் நினைக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கும்.


