August 14, 2022

தமிழக அரசியல் தலைவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள சீமானின் எழுச்சி

தமிழக அரசியல் தலைவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள சீமானின் எழுச்சி

புதிய இணைப்பு

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் குறித்த தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் நின்றது.

இந்நிலையில் வெளிவந்துள்ள வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி,

அரக்கோணம், பாவேந்தன்-11788

ஆரணி, தமிழரசி-23954

வடசென்னை, காளியம்மாள்-29681

தென்சென்னை, ஷெரின்-18461

ஸ்ரீபெரும்புதூர், மகேந்திரன்-12133

கிருஷ்ணகிரி, என்.மதுசூதனன்-18461

திருவண்ணாமலை, ரமேஷ்பாபு-21012

கள்ளக்குறிச்சி, சர்புதின்-18563

சேலம், ராஜா அம்மையப்பன்-11587

தர்மபுரி, ருக்மனி தேவி-8808

மத்திய சென்னை, கார்த்திகேயன்-17335

நாமக்கல், பாஸ்கர்-23621

தேனி, சாஹூல் ஹமீத்-7726

கரூர், கருப்பையா-16445

திருச்சி, வி.வினோத்-51831

தஞ்சாவூர், கிருஷ்ணகுமார்-26852

விருதுநகர், அருள்மொழிதேவன்-14829

தூத்துக்குடி, ராஜசேகர்-24931

தென்காசி, சி.எஸ்.மதிவாணன்-40387

கன்னியாகுமரி,வி. ஜெயன்ரேன்-6231

திருவள்ளூர்,வெற்றிசெல்வி-17210

காஞ்சிபுரம், ரஞ்சனி-48338

விழுப்புரம், பிரகலதா பாவேந்தன்-15788

பொள்ளாச்சி, சனுஜா-21642

பெரம்பலூர், சாந்தி-41633

கடலூர், சித்ரா-15884

மயிலாடுதுரை, சுபாஷ்னி-14829

நாகப்பட்டிணம், மாலதி-25858

சிவகங்கை, சக்திபிரியா-22547

மதுரை, பாண்டியம்மாள்-13329

ராமநாதபுரம், புவனேஷ்வரி-11568

திண்டுக்கல், மன்சூர் அலிகான்-28321

புதுச்சேரி, சர்மிலாபேஹம்மரி-8590

திருநெல்வேலி, சத்யா-38814

ஈரோடு, சீதாலட்சுமி-35797

சிதம்பரம், எம்.சிவஜோதி-12694

என மொத்தம் நாம் தமிழர் கட்சி 847213 வாக்குகளைப் பெற்றுள்ளது.

முதலாம் இணைப்பு

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி அணியினர் கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் சிலவற்றை ஆட்டம் காண வைத்துள்ளது.

தமிழத் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்திவருகின்ற நிலையில் அவரின் இந்த பேரெழுச்சி சில தலைவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

குறித்த தேர்தலுக்காக பிரதான அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரங்களை மேற்கொண்ட நிலையில் சீமான் ஏழை மக்களை மையப்படுத்தி அவர்களில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.

எனினும் சீமானின் இந்த அரசியல் வியூகத்தை பிரிவினைவாதம் என முத்திரை குத்தி பிரதான கட்சிகள் சில சீற்றம் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் அந்த அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதுடன் தமிழகத்தில் பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகுவுக்கு அடுத்த இடத்தை நாம் தமிழர் கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது.

குறிப்பாக தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவற்றைவிட நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக சீமான் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதையே இன்றைய வாக்கு நிலவரம் வெளிப்படுத்துகிறது.

வழமையாக சீமான் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம். அப்ப வேடிக்கையை பாருங்க என குறிப்பிடுவார். சீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கி போயிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.