August 15, 2022

இலங்கை தமிழர் தேசமே: முன்னாள் முதலமைச்சர் உறுதி!

இலங்கை என்றுமே ஒரு சிங்கள பௌத்த நாடாக இருந்திருக்கவில்லையென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலில் இன்றைய கால சூழலை வைத்து இலங்கை ஒரு பௌத்தநாடு   என்ற கருத்தை வலியுறுத்த தெற்கில் பலரும் எத்தனிக்கின்றார்கள். அண்மையில் ஆண்டகை மல்கம் இரண்ஜித் போன்றவர்கள் இந்தக் கருத்தை ஒத்துக்கொண்டுள்ளமை அவர்களின் கருத்தை மேலும் வலுவாக்கியுள்ளது. “தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் “எமது”நாட்டை ஆளப்பார்க்கின்றார்கள். இது ஒருசிங்களபௌத்தநாடு. நாம் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளியோம்”என்றவிதத்தில் பௌத்தபிக்குமார்கள் மிகஆக்ரோமாகக் கூறிவருகின்றார்கள்.
இது பற்றி தனது கருத்தை வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் இலங்கையானதுஅதன் குடிமக்கள் ஒவ்வொருவருக்குஞ்சொந்தம்.தனி இனமோமதமோஅதனைச் சொந்தம் கொண்டாடமுடியாது. இதுபல்லினம் வாழும்,பலமதங்கள் நிலவும்,பன் மொழிகள் பேசப்படும்நாடு. இலங்கைபௌத்தசிங்களநாடுஎன்று கூறுவதின் காரணம்; என்னஎன்றுநாம் பரிசீலிக்கவேண்டும். அதாவது இலங்கைபௌத்தசிங்களநாடு,மற்றையமத, இன,சமூகமக்கள் வந்தேறுகுடிமக்கள். அவர்களுக்குநாம் பார்த்துக்கொடுத்தால்த்தான் உரிமைகள் கிடைக்குமே  ஒளியதாமாக அவர்கள் எதனையுங்கொண்டிருக்கவில்லைஎன்றஅடிப்படையிலேயே இவ்வாறுபுத்தபிக்குகளாலும் மற்றையோராலும் சொல்லிவரப்படுகிறது. இது உண்மையில் இலங்கையில் சிறுபான்மையினரைஅடிமைப்படுத்த,பயப்படுத்த,அந்நியப்படுத்தஎடுத்துவரப்படும் நடவடிக்கைகள்.
பிரச்சினைகள்ஏற்பட்டதே இவ்வாறானபேச்சுக்களாலும் சிந்தனையாலுமே. கடந்த நூறு வருடங்களாக பெரும்பாலும் பௌத்தபிக்குகளும் மற்றும் சிங்களபௌத்தபுத்திஜீவிகள் சிலரும் சிங்களமக்களிடையே மூளைச்சலவைசெய்து இவ்வாறான  தவறான அபிப்பிராயத்தைஏற்படுத்தியுள்ளார்கள். எவ்வாறுசில இஸ்லாமிய இளைஞர்கள் மூளைச்சலவைசெய்யப்பட்டு பிறமத அப்பாவி மக்களின் உயிரைப் பறித்தால் தமக்கு சொர்க்கத்தில் 72 கன்னியருடன் வாழ இடம் கிடைக்கவைக்கும் என்றகருத்தில் ஊறவைக்கப்பட்டார்களோ அதேபோல சிங்கள பௌத்தர்களும் மூளைச்சலவைசெய்யப்பட்டு 1919க்குப் பின்னர் இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமே    என்றகருத்துக்கு அடிமையாக்கப்பட்டுவருகின்றனர்.
ஆனால் உண்மைஅதுவல்ல.
இந் நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே. அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்துவந்துள்ளார்கள். இந்துசமுத்திரத்தில் இடம் அமைந்திருந்து கடல் கொண்டகுமரிக் கண்டத்துடன் அவர்கள் பூர்வீகம் தொடர்புடையது. இலங்கையைப் பாதுகாக்கும் 5 ஈஸ்வரங்களானமுன்னேஸ்வரம்,திருக்கோணேஸ்வரம்,நகுலேஸ்வரம்,திருக்கேதீஸ்வரம்,தொண்டீஸ்வரம் ஆகியவற்றில் காணப்பட்டசிவலிங்கங்கள் புத்தகாலத்திற்குமுன்பிருந்தே இங்குஎழுந்தருளி இருந்தவை. இன்றுதெவிநுவரஅல்லதுடொன்றாஎன்றுஅழைக்கப்படும் வி~;ணு கோயில் தொண்டீஸ்வரசிவலிங்கத்தின் மேல் கட்டப்பட்டகோயிலாகும்.
பௌத்தமானது இலங்கைக்குக் கொண்டுவந்தபோதுஅம் மதத்தைமுதன்முதலில்தழுவியவர்கள் தமிழரே. தேவநம்பியதீசன் ஒருதமிழ் மன்னன். சில நூற்றாண்டுகாலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்தஇந்துத் தமிழர்கள் பௌத்தர்களாகமாறிதமிழ்பௌத்தர்களாகவேவாழ்ந்தார்கள். அக்காலகட்டத்தில் வழக்கில் இருந்ததொல்லியல் பௌத்தஎச்சங்களே இன்றுவடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படும் பௌத்தஎச்சங்கள். இவைதமிழ் பௌத்தர் காலத்துபௌத்தஎச்சங்களே.சிலவருடங்களுக்குமுன்னர் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின“தெமளபௌத்தயோ”(தமிழ் பௌத்தர்கள்) என்ற நூலைசிங்களமொழியில் வெளியிட்டிருந்தார். தமிழர்கள் பௌத்தர்களாகஒருகாலத்தில் வாழ்ந்துவந்தமைபற்றி அந் நூலில் அவர் ஆராய்ந்துள்ளார். “தெமளபௌத்தயோ”காலக்கிரமத்தில் பௌத்ததைக் கைவிட்டு இந்துசமயத்தைமீண்டும் தழுவினர்.
இவ்வளவுக்கும் சிங்களமொழிநடைமுறைக்குவந்தது கி.பி. 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்குமுன்னர் எழுதப்பட்டமகாவம்சம் என்ற நூல் பாளிமொழியிலேயேஎழுதப் பட்டது. அப்போதுசிங்களமொழிபிறக்கவில்லை. இந் நாட்டில் பேசப்பட்டதமிழ் மொழியைஅத்திவாரமாகவைத்துஅதன் மேல் பாளிமொழியினால் அமைக்கப்பட்டுநடைமுறைக்குவந்தமொழியேசிங்களமொழி.பாளிமொழியில் சிகலஎன்றால் சிங்கம். முதன் முதலில் சிகலஎன்றசொல் கி.பி. 4ம் 5ம் நூற்றாண்டுகளின் படைப்பானபாளிமொழியில் வெளிவந்ததீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறதுசிங்கங்கள் அந்தக் காலத்தில் இங்கிருந்ததாலோஎன்னவோ இந்தத் தீவுசிகலஎன்றுஅழைக்கப்பட்டதுஎனப்படுகிறது. 5ம் – 6ம் நூற்றாண்டுகளில் வெளிவந்தபாளிமொழிப் படைப்பானமகாவம்சத்தில் இரண்டுதடவைகள் சிகலஎன்றசொல் பாவிக்கப்படுகிறது. சிங்களமொழியோசிங்கள இனமோ இந்த இரண்டுபாளிமொழி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இந்த இரு நூல்களின் பின்னரேசிங்களமொழிதிரட்டப்பட்டுதொகுக்கப்பட்டது.
எச்.ஏ.ஜே.ஹ{லுகல்ல  1947ல்வெளிக் கொண்டுவந்த“சுற்றுலாப் பயணிகளுக்கானசெய்திகள்”என்ற குறு நூலில் சிங்களவர்கள் ஒருகலப்பு இனம் என்றும்,சிங்களமொழியானதுபெரும்பாலும் தமிழ் மொழியால் வளமாக்கப்பட்டது”என்றும் கூறியுள்ளார்.
முதலியார் டபிள்யு.எஃப்.குணவர்தனஅவர்கள் “சிங்களமொழியானதுஅடிப்படையில் ஒருதிராவிடமொழி. அதன் அடித்தளம் திராவிடம்.அதன் மேல் கட்டப்பட்டஆரியமொழியொன்றைச் சேர்ந்ததேசிங்களமொழி”என்று கூறியுள்ளார். அந்தஆரியமொழியேபாளியாகும். பௌத்தத்தைக் கொண்டுவந்தவர்கள் பாவித்ததுபாளிமொழியையே.ஆனால் அக்காலமக்கள் பாவித்தமொழிதமிழ். தமிழும் பாளியும் கலந்ததேசிங்களமொழி. அது 6ம் – 7ம் நூற்றாண்டுகளிலேயேமொழிஅந்தஸ்தைஅடைந்தது.பாளியில் இருந்துவந்தபடியால் ஆதிசிங்களமொழிபாளிகாலத்திலேயே இருந்துவந்ததுஎன்றுசிலர் கூறுவதுநகைப்புக்குரியது. “என்னுடையதாத்தா 100 வருடங்களுக்குமுன்னர் வாழ்ந்தார். ஆகவேநான் நூறு வருடங்களுக்குமுன்னரே இருந்துவாழ்ந்துவருகின்றேன்”என்று கூறுவதுபோல் இருக்கின்றது!
மேலும் துட்டகைமுனுவைசிங்களஅரசன் என்றுகுறிப்பிடுவதுபிழையானது. எல்லாளன் இந்துத் தமிழன் துட்டகைமுனுபௌத்ததமிழன் என்பதேஉண்மை.
ஆகவேசரித்திரரீதியாகப் பார்த்தால் மொழிரீதியாகவும் மதரீதியாகவும்இலங்கையில் ஆதியில் குடிகொண்டிருந்தவர்கள் தமிழ் மொழிபேசியஇந்துக்களே. இந்துக்கள் என்பதிலும் பார்க்கசைவசமயிகளேஎன்று கூறினால் அதுவேபொருத்தமானது.
அன்றுதொடக்கம் அதாவதுபுத்தகாலத்திற்குமுன்பிருந்தேதற்காலத்தில் சுமார் நூறு இருநூறு வருடங்களுக்குமுன் வரையில் மேற்கில் நீர்கொழும்பில் இருந்துவடபால் நோக்கிப்பரந்துகிழக்கில் கதிர்காமம் வரையில் தொடர்ந்துவியாபித்துவாழ்ந்துவந்தவர்கள் தமிழர்களே. இன்றும் வடகிழக்குமாகாணங்களின் பெரும்பான்மையர் தமிழர்களே.சிங்களமக்கள் என்றுமேவடக்கில் வியாபித்துவாழவில்லை.
உண்மையில் 1956ம் ஆண்டு“சிங்களம் மட்டும்”சட்டம் கொண்டுவரப்பட்டபோதுவடகிழக்கிற்குதமிழ் மொழியேஉத்தியோகபூர்வமொழியாகஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவேண்டும்அல்லது இலங்கைசமசமாஜாக் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிபோன்றவைஅன்று கூறியவாறுதமிழ்,சிங்களம் இரு மொழிகளுக்கும் நாடுபூராகவும் சமஅந்தஸ்து வழங்கியிருக்கவேண்டும். அவ்வாறுசெய்யாமல் வலுக்கட்டாயமாகசிங்களத்தைஒரேயொருஉத்தியோகபூர்வமொழியாக இலங்கைபூராகவும் பிரகடனம்செய்தமை இலங்கையைசிங்களபௌத்தநாடாகமாற்றஉள்;ரஆவலும்,ஆசையும்,அவசரமும் அவர்களுக்கு இருந்தமையைஎடுத்துக் காட்டுகின்றது.
அதாவது இலங்கைஒருசிங்களபௌத்தநாடல்ல. ஆனால் அதனைசிங்களபௌத்தநாடாகமாற்றவேண்டும் என்றஒருகருத்துபலசிங்களஅரசியல்வாதிகளையும் புத்திஜீவிகளையும் பீடித்துள்ளமைதெரியவருகின்றது. புத்தரின் பல்லை (தாது) யார் வைத்திருக்கின்றார்களோஅவர்களேநாட்டைஆளவேண்டும் என்றஒருபரம்பரைக் கருத்துநிலவுவதைவைத்துஇவ்வாறானசிந்தனைஏற்பட்டிருக்கலாம். இதனால்த்தான் தெலுங்குநாயகவம்சத்தைச் சேர்ந்தகண்டியஅரசர்கள் புத்தரின் பல்லைப்பாதுகாப்பாகவைத்துக் கொண்டுபுத்தமதத்திற்குசகலநன்மைகளையும் செய்துவந்தார்கள். கடைசிகண்டியமன்னன் கண்ணுத்துரையே ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் என்றபெயரைஏற்றிருந்தான்.
ஆகவே இலங்கைஒருசிங்களபௌத்தநாடல்ல. இலங்கையின் மொத்தசனத் தொகையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம்சிங்களபௌத்தர்கள் என்றமுறையில் இது சிங்களபௌத்தநாடென்றால் வடகிழக்கைசிங்களபௌத்தநாடுஎன்றகருத்தமைப்புக்குவெளியேஎடுத்துஅதற்குதனித்துவமானஒருஅடையாளத்தைவழங்குவதுஅவசியம். ஏன் என்றால் வடகிழக்குதமிழர்கள் வாழும் பகுதியில்அவர்கள் பௌத்தத்தைத்தழுவிபின்னர் கைவிட்டார்கள்.இப்போதுஅவர்கள் இந்துக்கள். மேலும் கிறீஸ்தவர்களும் முஸ்லீம்களும் இங்குவாழ்கின்றார்கள். வாழ்ந்துவருகின்றார்கள்.தற்போதுமீண்டும் அவர்கள் மத்தியில் பௌத்தத்தைதிணிக்கஎண்ணுவதுஅறமல்ல. அறிவுடைசெயலல்ல. இதனால்த்தான் நாங்கள் வடகிழக்கை இணைத்துதமிழ் மக்களின் தாயகப் பகுதியைஅடையாளஞ்செய்துஅதற்கெனஒருஅரசியல் கட்டமைப்பைஉருவாக்கிஅவர்களின் சுயாட்சிக்குவழிவகுக்கவேண்டும் என்றுகேட்டுவருகின்றோம்.அந்தக் கட்டமைப்பினுள் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுக்குஒருதனிஅலகைஒதுக்கவேண்டும் என்றும்கேட்டுவருகின்றோம். எமக்குஅவ்வாறானஒருஅரசியல் தனித்துவம் தரப்பட்டால் எமதுஅலகுசமயச் சார்பற்றஆனால் எல்லாசமயங்களையும் சமமாகக் கருதும் ஒருஅலகாகச் செயற்படும் என்றுஎதிர்பார்க்கலாமென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.