1745 சிம் அட்டைகள் மீட்பு

SIM cards
மாஓயாவலிருந்து 1,475 அலைபேசி சிம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (20) மாஓயாவில் மீ்ன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞர்கள் சிலரால் இந்த சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பையொன்றில் போடப்பட்டுவாறு இவை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அவற்றை மீட்டுள்ளனர்.