August 14, 2022

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தெரிவு செய்யப்பெற்றார்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அதிகாரபூர்வமான ஒரு அரசியல் பீடமாக விளங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பிரதமராக திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தெரிவு செய்யப்பெற்றார்.

கடந்த 17ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இடம்பெற்றது
நாடு கடந்த அரசின் உறுப்பினர்கள் மட்டும் ◌வாக்களிக்கும் தகைமை பெற்ற இந்த தேர்தலில் திரு உருத்திரகுமாரன் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் பிரதமரானார்.
இவரோடு போட்டியிட்ட கனடா வாழ் கணக்காளர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள், , அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களை கனடா உதயன் ஆசிரிய பீடம் வாழத்துகின்றது.