August 15, 2022

வான்பாதுகாப்பில் புதிய உச்சத்தை தொட்ட கடற்படை-மகிழ்சி செய்தி

வான்பாதுகாப்பில் புதிய உச்சத்தை தொட்ட கடற்படை-மகிழ்சி செய்தி

நடுத்தூர ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செலுத்தி வான் இலக்குகளை தாக்குவதில் ஒருங்கிணைப்பு தன்மையை இந்திய கடற்படை பெற்றுவிட்டது.

அதாவது ஒரு கப்பலில் உள்ள வான் பாதுகாப்பு ஏவுகணைகளை மற்ற கப்பல் ஏவ முடியும்.மேற்கு கடற்பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் சென்னை மற்றும் கொச்சி போர்க்கப்பல்கள் இந்த சாதனையை செய்துள்ளன.இரு கப்பலில் உள்ள ஏவுகணைகளை ஒரே கப்பல் கட்டுப்படுத்தி வேறு வேறு வான் இலக்குகளை தாக்கியுள்ளன.நீட்டிக்கப்பட்ட தூரம் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை ,டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணைந்து நடத்தியுள்ளன.

இந்த நடுத்தூர ஏவுகணையை டிஆர்டிஓ அமைப்பின் மற்றுமொரு பிரிவான டிஆர்டிஎல் இஸ்ரேலுடன் இணைந்து மேம்படுத்தியுள்ளது.இந்தியாவின் பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனம் இந்த ஏவுகணையை தயாரிக்கும்.

இந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கொல்கத்தா உட்பட எதிர்கால நாசகார கப்பல்கள் அனைத்திலும் பொருத்தப்பட உள்ளது.

ஒருங்கிணைப்பு தன்மையை நிரூப்பித்துள்ள இந்த சோதனை மூலம் உலகின் இந்த சக்தியை பெற்ற ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

எதிரிகளுக்கு எதிராக இது நம் பலத்தை அதிகரித்துள்ளது.

நண்பர்களே நமது தளம் இயங்க உங்கள் உதவி தேவை..தங்களால் இயன்ற நிதி உதவியை அளியுங்கள்.