August 10, 2022

வவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது!

வவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது! on: May 17, 2019In: இலங்கை, வவுனியா வவுனியாவில் பெண் மீது அங்கச் சேட்டை மேற்கொண்ட இளைஞன் கைது வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில்(பள்ளிவாசல் முன்பாக) நேற்று இரவு கணவனுடன் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மீது அங்கச் சேட்டை மேற்கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் இருவரை கணவனின் உதவியுடன் பொலிசாரிடம் பிடித்துக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் (பள்ளிவாசல் முன்பாக) கணவனுடன் கடைக்கு சென்ற குடும்பப்பெண் மீது அப்பகுதியிலுள்ள முஸ்லிம் ஆடையகத்தில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞன் ஒருவரும் அதேபகுதியில் உள்ள பிரபல மற்றுமொரு முஸ்லிம் ஆடையகத்தின் உரிமையாளரின் மகன் ஒருவரும் குறித்த பெண்ணுடன்  அங்கச் சேட்டை மேற்கொண்டுள்ளார். கணவனுடன் சென்ற பெண் நடந்தவற்றை கணவனுக்குத் தெரியப்படுத்தி குறித்த இளைஞனையும் அடையாளம் காட்டியுள்ளார். உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசாரைக் கண்டதும் இளைஞன் தப்பிக்க முயற்சித்துள்ளார் பொலிசார் இளைஞனை மடக்கிப்பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றிணையத் தொடங்கியுள்ளதையடுத்து நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞனை தொடர்ந்தும் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.