August 13, 2022

பின்வாங்கினார் தளபதி மாவை!

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு வடக்கில் இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் தாம் கோரியதாக வெளியான செய்திகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நிராகரித்துள்ளார்.
தாக்குதல்களில் பல தமிழ்மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதால் வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதற்காக அனைத்துலக புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வர முடியும் என்றே நான் கூறியிருந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு,நீர்கொழும்பு,மட்டக்களப்பு ஆகியவிடங்களில் தீவிரவாதிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆகையால்,நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வடக்குக்கும் இராணுவப் பாதுகாப்பு அவசியமென கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வில் மாவை சேனாதிராஜா கருத்து வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது