August 14, 2022

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் சமய பாட வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது.

டென்மார்க் வாழ்
சைவப் பிள்ளைகளுக்கு
ஓர் நற்செய்தி !

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில்
சமய பாட வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்
மாலை 18,00 மணிக்கு வகுப்பு
இடம்பெறுகின்றது.

டென்மார்க்கில் பிறந்து, கொப்பனேக்கன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பயின்றுகொண்டிருக்கின்ற மாணவன் செல்வன் இளங்கோ இராமரத்தினம். அவர்களால் கற்பிக்கப்படுகின்றது.

சைவ சமத்தின்பால் ஈர்ப்புக்கொண்டு
தன்முனைப்போடு தேடல் மூலம் அமேரிக்காவில் சமயப்பெரியார்களிடம்
சயத்தின் ஆரம்ப படிமுறைகளை கற்றதன்
வெளிப்பாடாக ….

இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வருகின்ற
சைவசமயத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாக கற்பிக்க முன்வந்திருக்கிறார்.

டேனிஸ் மொழியிலும் …
தமிழ் மொழியிலும் கற்றல் வகுப்புக்கள்
இடம்பெறுவதால் ..
அனைத்துப் பிள்ளைகளும் இதன் மூலம்
பயனடையலாம்.

“ கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றார் தொழார் எனின் “