August 18, 2022

குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் கோத்தா – சுமந்திரன்

இலங்கையின் குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் கோத்தபாய இருக்கக் கூடும் எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நாட்டில் மோசமான மிக கவலையான சம்பவம் நடந்து ஒரு சில நாட்கள் கடக்க முன்னா் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ச அடுத்துவரும் ஜனாதிபதி தோ்தலில் தான் களமிறங்கப்போவதாக அவசர அவசரமாக அறிவித்திருக்கின்றாா். இவ்வாறான சூழலை பயன்படுத்தி அவா் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறித்து கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமகால நிலமைகள் தொடா்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினாின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கையிலேயே அவா் மேற்கண்டவாறு கூறினாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

படையினாின் உளவு பிாிவில் உள்ள சிலா் முன்னைய ஆட்சியாளா்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்பவா்கள் இவ்வாறு நாட்டில் அசாதாரண சூழல்

உருவாக்க செயற்பட்டிருக்கிறாா்கள் என்பது தெளிவாகிறது. இந்த மோசமான மிக கவலையான சம்பவம் நடந்து ஒரு சில நாட்கள் கடக்க முன்னா் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸ அடுத்துவரும் ஜனாதிபதி தோ்தலில் தான் களமிறங்கப்போவதாக

அவசர அவசரமாக அறிவித்திருக்கின்றாா். இவ்வாறான சூழலை பயன்படுத்தி அவா் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறித்து கவனத்தில் எடுக்கப்படவேண்டும். இந்த வருடத்தின் இறுதியில் ஜனாதிபதி தோ்தல் வருகிறது.

அதில் தான் வேட்பாளராக போட்டியிட கோட்டாபாய முயற்சித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தொிந்த விடயம். இந்நிலையில் தற்போது இடம்பெற்றதுபோன்ற ஒரு நிலமை உருவாகும்போது அதிலிருந்து நாட்டை பாதுகாக்க பலமான ஒருவா்,

புலிகளுடன் போரை நடத்திய திறமையானவா் அவா் நாட்டுக்கு தேவை என பலா் சொல்லும் விதமாக தாக்குதல் நடந்துள்ளது. ஆகவே அமைச்சா் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளா் மாநாட்டில் கூறியதுபோல் முழுமையான விபரங்களும் வெளியிடப்படவேண்டும்.

அதனை மூடி மறைக்ககூடாது. வீணாக பலா் கொல்லப்பட்டுள்ளனா், வெவ்வேறு நோக்கங்களுக்காக அப்பாவி மக்களுடைய உயிா்கள் பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களுடைய உயிா்கள் பறிக்கப்பட்டுள்ளது. அது வேறு ஆட்களுடைய தேவைக்காக பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு முன்னெச்சாிக்கையினை பதவி விலகியுள்ள பாதுகாப்பு செயலாளா் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பபட்டுள்ள பொலிஸ்மா அதிபா் ஆகியோா் ஜனாதிபதிக்கு தொியப்படுத்தியுள்ளாா்கள் என்பதை மிக விரைவில் அவா்களே பகிரங்கமாக வெளிப்படுத்துவாா்கள்.

என நாங்கள் நம்புகிறோம். ஆகவே தனக்கு தொிந்திருந்தும் நடவடிக்கை எதனையும் எடுக்காமல் சுற்றுலா சென்றாா் ஜனாதிபதி, அவா் வெளிநாட்டில் இருந்தபோதும் தகவல் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் எதனையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயற்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டம் ஒழுங்கு பிரத்தியேக அமைச்சாக இருந்தது. அவ்வாறு இருந்தபோதே 19ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 19ம் திருத்தச்சட்டத்தில் பாதுகாப்பு, மகாவலி, மற்றும் சுற்றுசூழல் அகிய அமைச்சுக்கள்

மட்டுமே ஜனாதிபதியிடம் இருக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது. அந்தேவேளை சட்டம் ஒழுங்கு என்ற அமைச்சின் கீழ் இருந்தது. அதனை பிடுங்கி பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி வைத்திருந்தது சட்ட முரணானது.ஆகவே அந்த பொறுப்பை வைத்திருந்த ஜனாதிபதியே

இந்த விடயத்திற்கு பொறுப்புகூறவேண்டும். வெறுமனே பொறுப்புகூறல் என்பது உத்தியோகத்தா்கள் மட்டத்தில் நின்றுவிட முடியாது. ஜனாதிபதி, பிரதமா் இந்த விடயத்தில் பொறுப்புகூறவேண்டும். பிரதமா் தனக்கு ஒன்றும் கூறப்படவில்லை என கூறினாலும்,

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என நாட்டுக்கு கூறியிருக்கவேண்டும். 6 மாதங்கள் பேசாமலிருந்துவிட்டு இப்போது ஒன்றும் தொியாது என கூறுவது பொறுப்பான செயற்பாடாக கருத முடியாது.

மேலும் இது தவிா்த்திருக்கவேண்டிய குரூரமான சம்பவம். மற்றும் இந்த சம்பவங்களின் பின்னணியில் இராணுவ புலனாய்வு பிாிவில் உள்ள சிலவா் இயங்கியிருப்பதும் தேசிய தௌபீக் யமாத் அமைப்புக்கு மாதாந்த சம்பளம் கொடுக்கப்பட்டமை,

வவுணதீவு கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு இவா்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் தொியவந்துள்ளது. ஆகவே இது தமிழிழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெற்றதாக காண்பித்து குழப்பத்தை உருவாக்கி அந்த குழப்பத்தின் ஊடாக ஒரு பலவான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக

மிக கீழ்த்தரமாக செயற்பட்ட சம்பவங்கள் இவை என்பது புலனாகிறது. இந்த சம்பவங்கள் தொடா்பான விசாரணையிலிருந்து வெளியாகும் உண்மைகள் மறைக்கப்படகூடாது. அவை அம்பலப்படுத்தப்படவேண்டும். மேலும் முன்னாள் பாதுகாப்பு தரப்பினா் மட்டுமல்ல சில முஸ்லிம் அரசியல்வாதிகளும்

இதனை வளரவைக்க பல உதவிகளை செய்துள்ளாா்கள் என்பது புலனாகிறது. இவை எல்லாவற்றுக்கும் இவா்கள் எதோவொரு வகையில் பொறுப்புக்கூறவேண்டியவா்கள்.உயிாிழந்த மக்களுக்கு எமது ஆழ்ந்த வருத்தத்தை தொிவிப்பதுடன்,

மக்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பிலிருந்து அரசு தவறியுள்ளது என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம் என்றாா்.