August 18, 2022

தீவிரவாதிகளுடன் அமைச்சர் ரிசாட்?

தீவிரவாதிகளுடன் அமைச்சர் ரிசாட்?

சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியது.

அமைச்சர் ரிசாட் கூறுவது 100வீதம் உண்மை அதனை பாராளுமன்றத்தில் சம்பந்தன் பா.உ அவர்கள் விடுதலைப்புலிகளின் போராட்டம் உரிமை வேண்டிய போராட்டம் அதனை இந்த தீவிரவாத தாக்குதல்களுடன் ஒப்பிட வேண்டாம் என மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் முஸ்லீம் தீவிரவாத அமைப்பையும் ஒரே தராசில் வைக்க முயற்சிக்கிறாரா ரிசாட் இவர் கூறுவதைப் பார்த்தால் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதுவார்கள் என ரிசாட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா போன்றவர்கள் கடந்த கால பாராளுமன்ற அமர்வுகளில் கூறியது இன்று நிறைவேறி விட்டது என கூறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதை விரைவில் கூறிவிடுவார் போல இருக்கிறது என மக்கள் கூறுகின்றனர்.

இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தவில்லை அது உண்மைதான்..

அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தி வருகின்றனர்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே என நீங்கள் புலம்புவதால் என்ன இலாபம் கடந்த வியாழன் பாராளுமன்ற அமர்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமது அரசியலிற்காக அரசியல் வாதிகள் தொடர்பு பட்டிருப்பது தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என அரசியல் வாதிகள் விமர்சிப்பார்கள் குற்றவாளிகள் மகா ராசாக்கள் தான்….

தமது சுயலாப அரசியலுக்காக இந்த பயங்கரவாத தாக்குதலை வேறொரு திசையை நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.

நீங்கள் என பதற வேண்டும் நீங்கள் அப்படி இல்லை என்றால் சும்மா இருங்களன் அமைச்சர் ரவுப் ஹக்கீமை எந்த அரசியல் வாதியும் விமர்சித்தார்களா அல்லது எந்த ஊடகமும் விமர்சித்ததா இல்லை ஏன் அவர் எதிலும் தொடர்பு படவில்லை பாராளுமன்றத்தில் கூட மிக நிதானமாக உரையாற்றுவார் நீங்கள் அப்படியா மன்னார் நீதி மன்றத்தையே அடித்து உடைத்து நீதிபதியையே உடன் வெளியேற்றியவர்.

சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் மொழியை தடை செய்தனர், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். தமிழர்களின் உரிமையை பறித்தனர்.

இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது.

நீங்கள் கூறுவது சிறந்த கருத்து தமிழீழ விடுதலைப் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு அல்ல இரண்டும் ஒன்று என உலக நாடுகள் மட்டுமல்ல தமிழர்களும் கூறும் ஒற்றைச் சொல் எந்த ஒரு அரசியல் தலைவரும் முஸ்லீம் மக்களை எந்த ஒரு இடத்திலும் தீவிரவாதி என குறிப்பிட வில்லையே…

அமைச்சர் ரிசாட் பதியுதீன் தீவிரவாதிகளுடன் தொடர்பு அவர்களிற்கு பல உதவிகளை வழங்கியுள்ளார் என குற்றம் சாட்ட உங்களுக்கு உள்ள வழமையான உணர்வுகளை துாண்டி விட்டு எதுவும் தொரியாத முஸ்லீம் மக்களை உங்கள் பக்கம் பார்க்க விட்டு அனுதாப வாக்கை எடுக்க நினைப்பது எவ்வளவு கேவலம் இதை மார்க்கம் ஏற்குமா…

தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பங்குதாரர்களாக்கிய துரோகத்தை சிங்கள அரசியல்வாதிகளே மேற்கொண்டனர் அது உண்மை அதை எப்படி முஸ்லீம் சமூகத்திற்கு ஒப்பிட முடியும்… எந்த ஒரு சிங்கள அரசியல் வாதியும் முஸ்லீம் மக்களை தீவிரவாதிகளுடன் ஒப்பிட வில்லை…

இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு என குறிப்பிட்டுள்ளீர்கள் அது சரி அதற்காக நீங்கள் சில தீய சக்திகளுடன் இணைந்து செய்யும் செய்து கொண்டிருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான செயலை அல்லா ஏற்பானா…

வரிக்கு வரி அல்லா… அல்லா என கூறும் நீங்கள் செய்யும் பித்தலாட்டத்திற்கு எல்லாம் உங்களை மார்க்கத்தில் வைத்திருப்பது மார்க்கத்திற்கு எவ்வளவு பாவம்.

பொய் கூறுபவன் தான் பதறுவான்.. பயப்படுவான்.. அறிக்கை மேல் அறிக்கை விடுவான்…. உங்களுக்கு ஏன் இந்த உதறல் கூல்.. கூல்…. அமைச்சர் ரிசாட்