August 15, 2022

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சற்ற முன்னர் பதற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவர் கவசத்துடன் கூடிய ஆடையொன்றை அணிந்து சென்றுள்ளார்.

இதனை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.

எனினும் சோதனை செய்வதற்கு அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து விமான படையினர் நிலத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

இறுதியில் முதுகு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் காரணமாக பாதுகாப்பான ஆடை அணிந்திருப்பதாக குறித்த பயணி தெரிவித்துள்ளார்.

விமான படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால்,  விமான நிலைய நுழைவுப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.