படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நோர்வே தமிழ்மக்கள் நினைவுகூரல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி தமிழீழத்திலும் சிறீலங்காவிலும் பலியாகிய அப்பாவிப்பொதுமக்களுக்கு நினைவுகூரல் நிகழ்வு இன்று தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நோர்வேஜிய பிரமுகர்கள் மட்டக்களப்பில் தாக்குதலுக்குள்ளான தேவாலயத்தின் பாதிரியார் ஆகியோர் கலந்து கொண்டு நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
தமிழ் இளையோர் அமைப்பால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் ஒன்று கூடி இறந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தினர்.