வல்வெட்டித்துறை கம்பர்மலையில் கோயிலுக்குள்ளேயே நடந்த வாள்வெட்டு: பின்னணி என்ன?


வல்வெட்டித்துறை கம்பர்மலையில் ஆலயமொன்றில் ஏற்பட்ட களேபரத்தில் எட்டுப் பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தகவலை நேற்று காலையில் தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பான மேலதிக சில தகவல்களையும் இப்பொழுது தருகிறோம்.
கம்பர்மலை முத்துமாரி அம்மன் ஆலயத்திலேயே இந்த களேபரம் நடந்தது. கரகம் கட்டுவதில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டு வரை சென்றது. ஆலயத்திற்குள்ளேயே வாள்வெட்டும் நடந்தது.
கம்பர்மலை பாரதி சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பமே ஆலயத்தில் எதிரொலித்துள்ளது. சனசமூக நிலைய நிர்வாகம் தற்போது இரண்டு பட்டு, போட்டிக்குழுக்களாகியுள்ளன.
ஆலயத்தின் தீர்த்த திருவிழாவான நேற்று, கரகம் கட்டுதலில் இரண்டு குழுக்களும் முட்டி மோதி, ஆலயத்திற்குள் பெரும் மோதல் ஏற்பட்டது. இறுதியில் நேற்று கரகம் கட்டுதல் நடக்கவில்லை.