August 18, 2022

தாயக விருட்சத்தின் “ மகளீர் தன் எழிச்சி குழுமம்” எனும் பெண்கள் அமைப்பை உருவாக்கி இருக்கின்றோம். 


தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளை கடந்த இரண்டு வருடங்களாக கல்வி, விளையாட்டு, வாழ்வாதாரம் என பயணித்த நாம் இன்றைய தினம் தாயக விருட்சத்தின் “ மகளீர் தன் எழிச்சி குழுமம்” எனும் பெண்கள் அமைப்பை உருவாக்கி இருக்கின்றோம்.
இந்த மகளீர் அமைப்பானது எமது போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பெண்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டிருக் கின்றது.

*நுண் கடன்களில் இருந்து மக்களை மீட்டெடுத்தல்,
*சேமிப்பு பழக்கங்களை உருவாக்கல்,
*கிராமத்து பெண்களிடையே ஒரு இறுக்கமான உறவு கலந்த
வலைப்பின்னலை உருவாக்கல்,
*குழுக்களாக இணைத்து கிராம வளர்ச்சிக்கான வேலைகளில்
இயங்க வைத்தல்,
போன்ற செயற்பாடுகளை முக்கியமாக உள்ளடக்கி இந்த மகளீர் தன் எழிச்சி குழுமம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு அமைய இன்றையதினம் மன்னார் மாவட்டத்தில் தேனுடையான் கிராமத்தில் முதல் குழுமம் ஆரம்பிக்கப்பட்டிருக் கின்றது.
இவர்களுக்கான அனுசரணைகளை தாயக விருட்சம் சுவிஸ் புலம்பெயர் உறவுகளோடு இணைந்து வழங்கும். அதன் முதற்கட்டமாக செல்.ஜீவன் அவர்களின் குடும்பத்தாரின் நிதி அனுசரணையில் 50’000.00 உரூபாவினை குழுவின் செயற்பாட்டு நிதியாகவும், மற்றும் குழுமத்திற்கான ஆடைகள் உட்பட இதர செலவுக் காக 38’445.00 உரூபாவும் வழங்கப் பட்டது.
இந்த செயல்திட்டங்கள் சிறப்புற விருந்தினர்களாக கலந்து கொண்ட பெரியோர்களுக்கும் ஒழுங்கு செய்த திரு.ரொபேட் மற்றும் திரு.நந்தன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளை
செல்.ஜீவன்
ஒருங்கிணைப்பாளர்.