August 14, 2022

இன்று நாட்டில் ஏட்பட்ட 08 விதமான குண்டுவெடிப்பு சம்பவங்களை பற்றி உத்தியோகபூர்வமாக தகவல்

இன்று நாட்டில் ஏட்பட்ட 08 விதமான குண்டுவெடிப்பு சம்பவங்களை பற்றி உத்தியோகபூர்வமாக தகவல்களை வழங்க பாதுகாப்பு அமைச்சின் மூலம் விசேட ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது,இதன்போது
கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர அவர்கள் இக்குண்டு வெடிப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக சரியான எண்ணிக்கையை வழங்க முடியாது எனவும் காரணம் சிலவேளைகளில் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரலாம் எனவும் தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட கணக்குகளின் படி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 66 சடலங்களும் 260 காயமடைந்தோர் சிகிச்சை பெறுவதாகவும், மட்டக்களப்பு வைத்தியசாலையில் 28 சடலங்களும் 51 பேர் காயமடைந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தார், நீர்கொழும்பு வைத்தியசாலையில் 104 சடலங்களும் 100 காயமடைந்தோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கலுபோவிலை வைத்தியசாலையில் 02 சடலங்களும் 06 காயமடைந்தோரும் ராகம வைத்தியசாலையில் 07 சடலங்களும் 32 காயமடைந்தோரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். 03 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணியில் ஈடுபடும் பொழுது இறந்ததாகவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி மொத்தமாக 207 பேர் இருந்துள்ளதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் இன்று முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் இச்சட்டம் இரத்து செய்யவது எப்பொழுது என்பது பற்றி அறியத்தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பொலிஸ் அதிகாரிகள் அனைவரினதும் விடுமுறை இரத்துசெய்யப்பட்டுள்ளது.

இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுக்க பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் அவர்களின் உதவிக்காக STF படையினரையும் அழைக்கப்பட்டுள்ளது. முப்படையினரின் உதவியுடன் அனைத்தும் சரியான முறையில் நடைபெறுகின்றது எனவும் தெரிவித்த அவர், விசேட கண்காணிப்பு மையங்களும் நிறுவப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
011 2322445 என்ற எண் விசேட HOTLINE இலக்கம் என்று அறிவிக்கப்பட்டது.