August 11, 2022

சிங்கள ஐனாதிபதிகளின் வாக்குறுதிகளை நம்பி தமிழர்கள் ஏமார்ந்ததே வரலாறு

இலங்கை குடியரசாகிய பின் 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப்பட்டது இதன் அடிப்படையில் ஐெயவர்த்தன தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை ஆறு பேர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதிகளாக இருந்துள்ளனர்.
இவர்களுள் தமிழ் மக்கள் அதிகமாக நம்பி வாக்களித்து சந்திரிக குமாரணதுங்கவிற்கும் தற்போதைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் சந்திரிகாவை தமிழர்கள் சமாதான தேவதையாக வர்ணித்தனர் சாதாரண பொருட்களை கூட சந்திரிகா குடை சேலை என விளம்பரப்படுத்தினர். ஒன்றுக்கு இரண்டு தடவை சந்தர்ப்பம் வழங்கப்பட்டது இதுவரை எந்த ஐனாதிபதியும் பெறாத அதிகூடிய 62% மேற்பட்ட வாக்குகளை பெற்றார் ஆனால் இறுதியில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சுனாமி பொது கட்டமைப்பை கூட தடைசெய்தார் கூறிய வாக்குறுதிக்கு உறுதியான தீர்வை உரிய முறையில் துணிச்சலாக கொடுக்க தவறிவிட்டார் .
அவ்வாறு தான் மைத்திரியும் இலங்கை வரலாற்றில் வித்தியாசமான நல்லாட்சி என்னும் தலைப்பில் ஆட்சியை அரங்கேற்றினார் தமிழ் மக்களின் வாக்கு இல்லாவிட்டால் தன்னை புதை குழியில் புதைத்திருப்பார்கள் என கூறினார் புதிய அரசியலமைப்பின் மூலம் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்றார் அதனை தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டார் ஆனால் இன்று நடப்பதை நினைத்தால் மிக வேதனையாக இனி யாரையும் நம்பி பிரியோசனம் இல்லை என தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியாக பேசும் நிலை உருவாகியுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொறுத்த வரை இனி எந்த ஐனாதிபதியின் வாக்குறுதிகளையும் நம்பி தங்களுக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்துள்ளனர். எல்லோரும் தங்களை வைத்து கதிரையில் ஏறியவுடன் தங்கள் மீதே சவாரி விடுகின்றனர் என்ற விரக்தியை எதிர்வரும் காலங்களில் வெளிப்படுத்துவார்கள்.