மனிதர்களை கொல்வதற்கென்றே பிறந்த அரக்கன் கோத்தபாய ராஜபக்ச,

வெள்ளைவானில் தனக்கு தெரிந்தவர்களையும் கடத்தினார்கள் என குற்றம் சாட்டுகிறார் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மேர்வின்_சில்வா.
தன்னுடன் மேசையில் ஒன்றாக இருக்கும் போதே கோத்தபாய ஒரு நபரை சுட்டுக்கொல்ல தொலைபேசியில் உத்தரவிட்டதாகவும் சுட்டுக்கொல்வதுதான் இந்த நாட்டை நிர்வகிக்க சரியான வழியென்றும் அவர் கூறியதாகவும் மேர்வின் கூறுகிறார்.
ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பிரதான சூத்திரதாரியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவென தன்னுடைய அமெரிக்க குடியுரிமையை துறந்துவிட்டு இன்று நாடு திரும்பியபோது பலர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
மீண்டும் வெள்ளைவான் கடத்தலில் ஈடுபடவும் எதிர்க்கேள்வி கேட்பவர்களை சுட்டுத்தள்ளவும் இலங்கையின் அரக்கன் தயாராகிக்கொண்டிருக்கிறான்…
மேர்வின் சில்வாவின் இந்த பகிரங்கமான நேரடியான குற்றச்சாட்டிற்கு கோத்தபாய பதில் சொல்லப்போவதில்லை. ஏனெனில் இது எதுவும் பொய்யோ புனைவோ கிடையாது. அதை கோத்தபாய மறுத்துரைக்கவும் முடியாது.