August 11, 2022

துயர் பகிர்தல் ஜே.கே ரித்தீஷ்

பிரபல தென்னிந்திய நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலமானார்.

இவர் சிறிலங்காவில் கண்டியில் பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழக்கும் போது இவருக்கு வயது 46.

கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரித்தீஷ் மாரடைப்பால் காலமான செய்தி அறிந்து சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் வேதனையில் ஆழ்ந்துள்ளன.

இவருக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர்.