August 11, 2022

தேடித்தேடி கைது செய்யப்படும் கருணா, பிள்ளையான் குழு உறுப்பினர்கள்! வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்?

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முன்னாள் கருணா குழு உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்படிடுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசேட பொலீஸ் குழு ஒன்று கிழக்கில் ஆயுதக்குழுவா செயற்பட்ட கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேரை கைது செய்து கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களின் கைது குறித்த உத்தியோகவூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இன்நிலையில் மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக நடத்தப்படும் விசாரணைகளின் படி இவர்கள் விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் கருணா குழுவின் முக்கியஸ்தராக செயற்பட்ட மகிலன் என்பவரும் உள்ளார்.

இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து கருணாவுடன் இணைந்து திருகோணமலையில் இருந்த கடற்படையினருடன் சேர்ந்தியங்கியவர் என கூறப்படுகிறது.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் சிலர் பாதுகாப்பு அமைச்சில் இருந்து மாதாந்தம் சம்பளம் பெறும் முன்னாள் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது .

தமிழிழ விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து கருணா, பிள்ளையான் குழுவுடன் இணைந்து செயல்பட்ட துணை இராணுவக் குழுவினரை புலனாய்வு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொண்ட அரசாங்கம் அவர்களுக்கு இன்று வரை சம்பளம் வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு சுமார் நூற்றுக் கணக்கானவர்கள் தற்போது வரை அரசாங்கத்திடம் சம்பளம் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் இராணுவ துணைக் குழுக்களின் ஆதரவை சம்பளம் கொடுத்து பாதுகாப்பு தரப்பினர் பெற்றுக்கொண்டாலும் கிழக்கில் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத பல கொலைச்சம்பவங்கள் நடந்தேறியே உள்ளது.

2009 யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கிழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட மண்டூர் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயானை படுகொலை செய்தவர்களை இன்றுவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்யவில்லை.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்களையும் இன்று வரை கைது செய்யவில்லை.

இதே போன்று கடைசியாக வவுணதீவில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட இரண்டு பொலீசார் மீதான தாக்குதல் தாரிகளை இன்றுவரை கைது செய்ய முடியாது பாதுகாப்பு தரப்பினர் தடுமாறி வருகின்றனர்.

இன்நிலையிலேயே கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து கருணா பிள்ளையான் குழுவுடன் இணைந்து செயற்பட்டவர்களை பாதுகாப்பு தரப்பினர் தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் கொலை சதி!

இதே நேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிலர் இன்னுமொரு பாரிய சம்பவம் ஒன்றின் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கிழக்கில் வைத்து கொலை செய்ய, சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில் சந்­தேக நப­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா அண்மையில் பல முக்­கிய விட­யங்களை வெளிப்­ப­டுத்­தியிருந்தார்.

குறிப்­பாக இந்த விவ­கா­ரத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்­பி­ன­ரான புஷ்­ப­ராஜை கிழக்கில் வைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தரப்பு சந்­தித்­த­தாக கூறப்­படும் நிலையில், அச்­சந்­திப்பு தொடர்­பி­லான தக­வல்களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா தனது சட்­டத்­த­ரணி ஊடாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர அறிந்­தி­ருந்த நிலை­யி­லேயே புஷ்­ப­ராஜை கிழக்கில் வைத்து நாலக சில்வா தரப்பு சந்­தித்­த­தா­கவும், கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மி­டப்­பட்ட சம்­பவம் ஒன்று தொடர்பில் இடம்­பெற்ற இர­க­சிய விசா­ரணை நட­வ­டிக்­கை­களின் ஒரு அங்­க­மா­கவே அந்த சந்­திப்பு இருந்­த­தா­கவும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண சுட்­டிக்­காட்­டினார்.

விசா­ர­ணை­களை தமது சேவை பெறு­ந­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவே முன்­னெ­டுத்­த­தா­கவும், அதன் அறிக்­கையை அவர் பொலிஸ் மா அதி­ப­ரிடம் சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும், அவ்­வ­றிக்கை பிர­காரம் மேல­திக நட­வ­டிக்­கைகள் பல பொலிஸ் மா அதி­பரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அந்த சந்­திப்பில் புஷ்­ப­ரா­ஜுடன் பேசப்­பட்ட விட­யங்கள் என்ன என்­பது தொடர்பில் அச்­சந்­திப்பின் முழு­மை­யான ஒலி வடிவ பதிவை சி.ஐ.டி.யின­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ள­தா­கவும், அதனால் புஷ்­ப­ரா­ஜுடன் கலந்­து­ரை­யா­டி­யதை கொலை சதிக்­கான ஆதா­ர­மாக காட்­டு­வது எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண கூறினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கிழக்கில் வைத்து கொலை செய்­யவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்­விஸ்ஸை கொழும்பில் வைத்து கொலை செய்­யவும் சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் நடைபெறும் வழ­க்கு விசா­ர­ணைகளில் இவை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது போன்ற காரணங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்குற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பயணம் பல தடவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் எதிர்வரும் 12 திகதி மட்டக்களப்பிற்கு மீண்டும் ஜனாதிபதி விஜயம் செய்ய உள்ளார்.