August 15, 2022

இலங்கை அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

 

ஐந்தரை இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வழங்க முடியாது போகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் , உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 341 உள்ளூராட்சி சபைகளினதும் மற்றும் மாகாண சபைகளின் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறித்த காலத்திற்குள் சம்பளத்தை வழங்க முடியாது போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்ற நடவடிக்கையெடுத்தால் உரிய காலத்திற்குள் சம்பளத்தை வழங்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.