August 17, 2022

யாழ் கல்வியியல் கல்லூரிக்குப் புதிய பீடாதிபதி

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் உப பீடாதிபதியாக இருந்த திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்கள் இன்று 27.03.2019 புதன்கிழமை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக பணிப்பொறுப்புகளை ( 31.03.2019 முதல்) ஏற்பதற்காக கடமைகளைப் பொறுப்பேற்றார் அவருக்கு எமது இனிய வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியாக இருக்கும் திரு சதாசிவம் அமிர்தலிங்கம் அகவை அறுபது எய்தி எதிர்வரும் சனிக்கிழமை 30 03 2019 அரச சேவையிலிருந்து இளைப்பாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.