August 15, 2022

ஜெனீவா யாத்திரையும் அரசியல் தீர்வும் !!

ஜெனீவா யாத்திரையும் அரசியல் தீர்வும் !!

இந்த இரண்டுமே இவர்களால் செய்ய முடியாத காரியங்கள்.

கடந்த 3 வருடங்களாக TNA தலைமைகள் தீர்வு வரப்போகிறது என சொல்லி வந்தார்கள். நம்பிக்கை ஊட்டும் வகையில் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதிலும் ஒருபடி மேலாக லண்டன், கனடா போன்ற நாடுகளுக்கு சுமந்திரன் சென்று விளக்கவுரை பிரச்சாரங்கள் நடைபெற்றது. பொன்னாடையும் போர்த்தி கௌரவித்து அனுப்பினார்கள்.

உள்ளூரிலும் தமிழர்களுக்கு, சிங்களர்களுக்கு விளக்கவுரை எல்லாம் நடைபெற்றது. இதில் நகைப்புக்குரியதும் கவலைக்குரியதுமான விடயம் என்னவென்றால்……தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படவும் இல்லை வரைபு செய்யப்படவும் இல்லை. அப்படி நடைபெற வாய்ப்பே இல்லாமல் தான் இருந்தது. தொடர்ந்தும் தமிழர்களை எவ்வளவு முட்டால்கள் என நினைத்து செயல் படுகிறார்கள்? ஆயுதப் போராட்டம் கொடுத்த பரிசு TNA தலைமையை உச்சத்தில் வைத்து விட்டது.

அடுத்தது ஐ நா மனித உரிமைப் பேரவை மூலமாக நீதி கிடைக்க பாடுபடுவதாக TNA தலைமை பாடுபடுவதாக சொல்லி வருகிறார்கள். எப்படி நீதி கிடைக்கப் போகிறது? எப்படி போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படப் போகிறார்கள்? ஏற்கனவே இதை இன அழிப்பு என்றோ அல்லது மனித உரிமை மீறல் என்று சொல்ல முடியாது என்று சுமந்திரன் சொல்லிவிட்டார். அப்படியானால் இன்னும் ஏன் ஜெனீவா பயணங்கள்? உங்களை அரசியலில் தக்க வைக்க தமிழர்களை அடிமையாக்க ஏன் இந்த நாடகங்கள்?

ஒரு சிறு விளக்கம்…….ஐ நா மனித உரிமைப் பேரவை இலங்கையை மேற்பாவை மற்றும் ஆலோசனைகள் தான் வழங்க முடியும். இவர்களால் இலங்கையை கட்டுப்படுத்தவோ அல்லது நிர்ப்பந்திக்கவோ எந்த அதிகாரமும் இல்லை. அதிலும் காலவரை கூட சொல்ல முடியாது. இப்படியான ஒரு ஸ்தாபனம் தொடர்ந்தும் மேற்பார்வை செய்வதில் தமிழருக்கு என்ன லாபம்?

இதற்கு மேலாக இதை எப்படி பாதுகாப்புச் சபைக்கு அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல முடியும்? அது நடைபெற சாத்தியமே இல்லை. முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு நீதி கிடைக்கப் போவது இல்லை என்பதை கடந்தகால செயல்பாடுகள் துல்லியமாக காட்டுகிறது. ஜெனீவா யாத்திரைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஜெனீவா பயணங்களால் செய்யப்பட்ட நன்மைகள்……சபை மண்டபங்களில் ஒன்றுகூடுவது, தமிழ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது, குறூப் படங்கள் எடுப்பது, இவர்கள் செய்த சாதனைகளை ஜெனீவா ஆதரவாளர்கள் பாராட்டி புகழ்வது போன்றவை சாதாரணமாக நடைபெறும். ஆனால் இதுவரை காலத்தில் எந்தவொரு சர்வதேச ஊடகங்களில் வருவதே இல்லை.

TNA தலைமைகள் தங்கள் சுயநலத்திற்கும் அரசியல் லாபத்திற்கும் இவற்றை பயன்படுத்தி தமிழர்களை ஏமாற்றி கேவலப் படுத்வது கவலைக்குரிய விடயமாகும். இறுதியாக ஓரு சந்தேகம்……பாதிரியார் இமானுவேல் அவர்கள் எதற்காக ஜெனீவா சென்றார்? இதற்கு யாருக்காவது விளக்கம் தெரிந்தால் சொல்லவு