சாவகச்சேரியில் சிக்கியது கடத்தல் கும்பல்

தனங்கிளப்பு பகுதியில் இருந்து நுணாவிலுக்கு நான்கு உழவியந்திரங்களில் வெள்ளை மணல் சட்டவிரோதமாக கடத்தல் இடம்பெறுவதாக எமக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நாம் குறித்த பகுதிக்கு சென்ற போது பொலிஸாரைக் கண்டு கடத்தல் காரர்கள் உழவியந்திரங்களை வீதியில் கைவிட்டு தப்பிச் சென்றனர். அதையடுத்து நான்கு உழவியந்திரங்களையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு வந்ததாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.கே.கோணார தெரிவித்தார். அதுமட்டுமின்றி அனுமதிப்பத்திரம் இன்றி பாரவூர்தி மற்றும் உழவியந்திரங்களில் கடத்தப்பட்ட மரக்குற்றிகளையும் கைப்பைற்றியுள்ளதாக தெரிவித்தார்.
இக்கடத்தல்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.கே.கோணார தெரிவித்துள்ளாா்.