August 15, 2022

கொழும்பில் பதற்றம்; அகோரமாய் எழுந்துகொண்டிருக்கும் கரும்புகை!!

இன்று காலை கொழும்பு வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.