August 17, 2022

சுமந்திரனுக்கு ஐ,தே.க வில் முக்கிய பதவி!!

தற்போது நாட்டில் நிலவி வரும் குழப்ப நிலை காரணமாக நாட்டில் உள்ள கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். அதாவது மகிந்தவுக்கு ஆதரவான உறுப்பினர்கள் மற்றும் ரணிலு ஆதரவான உறுப்பினர்கள் என்னும் நிலையே இப்போது காணப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஐக்கிய தேசிய கட்சியுடன் தீவிரமான தொடர்பில் இருந்து வருபவர் என பல காலமாக கூறப்பட்டு வரும் விடயம்.

அதிலும் தற்போது பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் ரணில் தரப்புக்கு சுமந்திரன் பாரிய அளவில் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் சுமந்திரன் வாதாடி மைத்திரியின் முடிவின் மீது இடைக்கால தடை உத்தரவை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் , சுமந்திரனுக்கு பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் இடம் கொடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர அதிர்ச்சி தரும் தலவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரன் போட்டியிட மாட்டார் எனவும் அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசியபட்டியல் வழங்கப்படும் எனவும் .அதனாலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதிகம் முன்னிலையாகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.