August 11, 2022

அவுஸ்திரேலிய அரசு இலங்கையர்களுக்கு விடுத்த அவசர அறிவிப்பு!!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் செல்லலாம் என்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிரகம் அறிவிறுத்தியுள்ளது.

ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கான கடல் போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன இதனையும் மீறி அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் செல்ல முயன்றால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே விளம்பரப்படுத்தப்பட்டபடி யாரும் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் செல்ல முடியாது என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரேஸ் ஹட்செசன் தெரிவித்துள்ளார்.