தேர்தல் 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்படி?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் 2018ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலுக்கு அமைவாகவே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் கடந்த மே மாதம் ஆரம்பமாகின. ஒக்ரோபர் மாதம்25ஆம் திகதி, 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அடுத்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் வரையில் 2018ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது