August 11, 2022

மகிந்தவை ஆதரிக்க 20 கோடி பேரம் பேசப்பட்டதா..?: வெளியான அதிர்ச்சித் தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று காலை 6 மணியளவில் அமைச்சர் றிசார்ட் பதியூதீனை சந்தித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகள்,

இரண்டு பிரதியமைச்சர்கள் பதவிகள் மற்றும் 200 மில்லியன் ரூபாய் பணம் ஆகியவற்றை வழங்குவதாக கூறி பேரம் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இருப்பினும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முடியாது என றிசார்ட் பதியூதீன் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை மற்றுமொரு கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை இன்று காலை சந்தித்த பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க 200 மில்லியன் ரூபாயை தருவதாக பேரம் பேசியுள்ளதுடன் அதற்கு சுரேஷ் இணங்கியதாக பேசப்படுகிறது.

ஆனால் நன்றிக் கடனுக்காகவே மஹிந்தவை சந்தித்தேன் என வடிவேல் சுரேஷ் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.