August 12, 2022

அலரி மாளிகையிலிருந்து ரணிலை வெளியேற்றப் போகிறதா இராணுவம்?: நாமல் அதிரடி தகவல்

 

ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையிலிருந்து வெளியேற்ற இராணுவத்தினரைப் பயன்படுத்தப் போவதில்லையென நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையிலிருந்து வெளியேறுவதற்கான கால அவகாசம் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.