August 11, 2022

கவிதாஞ்சலி.அமரர் . சாரங்கன் சர்மா

டென்மார்க் செயலாண்டில்
( ruds- vedby) வாழ்ந்து
தற்போது யூலண்டில்
கேணிங்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற விஷாகன் சர்மா தம்பதிகளின்

அன்பு மகன் அமரர் . சாரங்கன் சர்மா அவர்களின் இழப்பு ஈடுயிணையில்லாத பேரிழப்பாகும். அவர்தம் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவிதாஞ்சலி.

இலையுதிர் காலத்தில் ஒர்
இளம் குருத்து சருகாகியது.
விலையென்ன கொடுத்தாலும்
மீட்கமுடியா தூரத்தில்
தீயோடு சங்கமமாகியது.

இணுவில் சொத்தே
டென்மார்க்கின் வித்தே
குரு குலத்தின் முத்தே
எங்கள் புன்னகைக் குருத்தே!

நீ தேரேறி வரும் போது
சாதிப்பாய் என்றிருந்தேன் – இயமன்
உன்னிடம் புகையிரதமேறி
வந்த மர்மமென்ன கண்ணா !

காலனையே கைகாட்டி
திகைக்கப் பண்ணி சோதித்து விட்டாயே
மந்திரத்தை உச்சரித்த உதடொன்று
இன்று மெளனித்துப் போனதேனோ ?

கூவ முற்பட்ட குயிலொன்று
மெளனித்துப்போனது
சிறகெடுத்துப் பறக்க முற்பட்ட
சுதந்திரப் பறவை இன்று
பனிமலையில் சிக்கித்ததேனோ ?

பெற்றோர்களை எண்ணாமல்
பெருந் தூரம்போக
எப்படி முடிந்தது உன்னால்
உடன் பிறந்த அண்ணணையாவது
எண்ணவில்லையா உன் மனம்.

ஜோடிக் கிளிகள் போல
கூடித்திரிவீர்களே கூப்பிட்ட குரலுக்கு
முருகன் கோவிலுக்கு ஓடிவருவாயே
தாங்கொண்ணாத் துயரத்தில் மனம்
அமைதியில் உனக்காக உறைகிறது.

வாழ்க்கை ஒரு மெழகு திரி
எட்ட நின்று பார்ப்பவர்க்கு
அழகாகத்தான் தெரியும்
கிட்ட சென்று பார்க்கும் போதுதான்
தன்னையேயுருக்கி அழுவது புரியும்

அன்னாரின் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திப்போம்.

இணுவையூர் சக்திதாசன்