August 15, 2022

தமிழ் நாட்டு அகதி முகாமல் இருந்து இலங்கையர்கள் 35 பேர் இலங்கைக்கு வந்தடைந்தனர்!

தமிழ்நாட்டில் அகதிமுகாமில் இருந்த இலங்கை தமிழர்கள் 35 பேர் விமான மூலம் இன்று திங்கட்கிழமை (22) யுனிசெவ் நிறுவனத்தால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியா தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த வடக்குகிழக்கைச் சேர்ந்த பலர் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் தமது தாய்நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை மீள்குடியேற்ற யுனிசெப் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் கிளிநொச்சி,வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரை இன்று திங்கட்கிழமை காலையில் தமிழ் நாட்டில் இருந்து இரண்டு விமானங்கள் மூலம் இலங்கை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

யாழருவி நிருபர் சரவணன்