August 10, 2022

அனைத்து நாடுகளுக்கும் சவால் விடும் இலங்கை மாணவன்?

இலங்கையில் மாணவன் ஒருவரினால் தயாரிக்கப்பட்டு வரும் ரொக்கட் விரைவில் விண்ணில் செலுத்துவது தொடர்பில் அரச தலைவர் கவனம் செலுத்தியுள்ளார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவன் கிஹான் ஹெட்டி ஆராச்சியினால் இந்த ரொக்கட் தயாரிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மாணவனை நேரில் சந்தித்து மாணவனின் திறமைக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

மாணவன் தயாரித்த ரொக்கட்டை விண்ணுக்கு செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அதற்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரச தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.