August 17, 2022

இந்தோனேஷியாவைத் தாக்கியது சுனாமி: உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய மக்கள்

இந்தோனேஷியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது.

இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்த நிலையில் சுமார் 2 மீட்டர் உயரத்தில் (6.6) சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது.

இந்தோனேசியாவின் Sulawesi பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் 10 ற்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

இதேவேளை இந்த நிலநடுக்கத்தின் போது கடலில் இருந்து அலைகள் சாதாரணமாக கரையை நோக்கி எழும்பி வருவது போன்று இருந்தது. இதனால் அக் காட்சியை அங்கிருக்கும் மக்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மேலே எழும்பிய ராட்சத அலையால் அங்கிருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதால் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.