August 18, 2022

150 பிணங்களுடன் அலைந்து திரிந்த லொறி: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

லொறி ஒன்று 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு அலைந்து திரிந்த சம்பவம் மெக்ஸிகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில் கடந்த ஒரு மாதமாக கண்டெய்னர் லொறி ஒன்று அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்த வண்ணம் இருந்துள்ளது.

இருப்பினும் இதனை அப்பகுதி மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று அந்த லொறியில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசவே, அப்பகுதிவாசிகள் இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த கண்டெய்னர் லொறியை திறந்து பார்த்தனர்.

அப்போது அதில் 150 க்கும் மேற்பட்ட பிணங்கள் இருந்தது. அவை எல்லாம் ஒரு மாதத்திற்கு முன் இறந்த மனிதர்களின் உடல்கள் என்பது தெரியவந்தது.

இவர்களுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை என்பதால், பிணத்தை அப்படியே புதைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் புதைக்க இடம் இல்லாததால் கடைசியில் இப்படி தூக்கிக் கொண்டு சுற்றி வருகிறார்கள்.

விரைவில் புதைக்க இடம் தயார் செய்யப்பட்டு அந்த பிணங்கள் புதைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.