August 17, 2022

சுவிட்சர்லாந்தில் காணமல் போன சிறுவன் விபத்து காரணமாக பலி,

 

சுவிட்சர்லாந்தில் காணமல் போன சிறுவன் ஒரு விபத்து காரணமாக பலியாகியிருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் காணமல் போன சிறுவன் ஒரு விபத்து காரணமாக பலியாகியிருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை காணமல் போய்விட்டதாக பொலிசாருக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக தொடர்ந்து தேடிவந்த பொலிசாரால் கடந்த வெள்ளிக் கிழமை காலை Oberhofen am Thunersee பகுதியில் சிறுவன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

சிறுவன் கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் நடந்து வந்திருக்கும் போது விபத்து ஏற்பட்டிருக்கலாம், அதன் காரணமாகவே இறந்திருக்கலாம் என்றும் இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.