துயர் பகிர்தல்- திருமதி. விஜயலட்சுமி ரமணிந்திரன் அவர்கள் – 11.,09.2018

மரண அறிவித்தல் – திருமதி. விஜயலட்சுமி ரமணிந்திரன் அவர்கள் – 11.,09.2018

தோற்றம்: 10.10.1966 மறைவு:11.09.2018

யாழ்ப்பாணம்-பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வாழ்விடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி ரமணிந்திரன் அவர்கள் 11.09.2018 இரவு கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், இறைபதம் எய்திய பொலிஸ் உத்தியோகத்தர் தெய்வேந்திரம் – மற்றும் தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்;

இறைபதம் எய்திய புகையிரத நிலைய அதிபர் நடேசன் – சிவயோகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்;

ரமணீந்திரன் அவர்களின் அன்புக் மனைவியும்;

கபிஷன் அவர்களின் அன்பு நிறைந்த அம்மாவும்;

தவேந்திரன், ரவீந்திரன், ராதாலட்சுமி, இந்திராலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும்;

மதிவதனி, முத்துக்குமரன், சுபத்திரா, அம்பிகைபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரவீந்திரன், புவீந்திரன், இந்திரகுமாரி, நிர்மலா, மற்றும் சிவபதம் எய்திய மல்லிகா ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 13.09.2018 அன்று இல. 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் காலை 08:00 மணி முதல் முற்பகல் 10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப் பெற்று பகல் 10:00 மணி முதல பகல் 12:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் இல. 12492 Woodbine Avenue அமைந்துள்ள Highland Hills Memorial Gardens மயானத்திற்கு எடுத்து செல்லப்பெற்று தகனம் செய்யப் பெறும்.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

துயர்பகிர:

ரமணி

33 Elk Street, Brampton ON, L6R 1R9

(Main intersection of Bovaird Drive and Tobram Road and near Petter Robertson Blvd)

Home Tel: 905-793-8993

துயர் பகிர்தல்