கோத்தாவே ஜனாதிபதி வேட்பாளர் ?

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எடுத்த தீர்மானம் இந்தியாவின் உள்ளக நடவடிக்கைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றிருப்பின் வேறு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் இருப்பினும் இது இந்தியாவின் உள்ளக விடயம் என்பதால் இந்த விடயம் தொடர்பில் தனக்கு எவ்வித கருத்தும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Allgemein