பொங்கல் கண்டார் செம்மலை நீராவியடி பிள்ளையார்!

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கின்ற பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகள் நீண்ட இடைவெளியின் பின்னர் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க ஆலயம் 2009ம் ஆண்டின் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள மயப்படுத்தப்பட்டிருந்தது.அங்கு இராணுவ பாதகாப்புடன் புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.பிள்ளையார் ஆலயத்தை இலக்கு வைத்து புத்தர் சிலை வைக்கப்பட்டு விகாரையொன்றினை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை பிரதேச தமிழ் மக்கள் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பொங்கி தங்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

முன்னதாக குறித்த பகுதியில் நில ஆக்கிரமிப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றது.

தமிழர்களின் முழுமுதல் கடவுளான பிள்ளையார் ஆலயம் பராமரிப்பின்றி யுத்த அவலங்களின் மத்தியில் எஞ்சியுள்ள நிலையில் தமிழ் மக்கள் பொங்கல் பொங்கி வழிபடும் தொன்று தொட்டுவந்த மரபு வழிபாட்டினை கைப்பிடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

தாயகச்செய்திகள்