பிரித்தானியாவிலிருந்து 2வது நாளாகத் தொடரும் ஈருளிப் பயணப் போராட்டம்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்பதற்காக போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கோடு நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவிலிருந்து ஆரம்பமாகிய ஈருளிப் பயணம் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் பிரித்தானியாவில் தொடர்கிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 10.30 மணியளவில் தாயக விடுதலைப் போரில் உயிரிழந்த மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் பொதுமக்களும் அகவணக்கம் செலுத்திய பின் இரண்டாவது நாள் ஈருளிப் போராட்டம் தொடர்கின்றது.

இன்று பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து எல்லையில் உள்ள ஹார்விச் துறைமுகத்தில் தரித்து அங்கிருந்து நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஈருளிப் போராடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கு இடையில் சில இடங்களில் தரித்து நின்று பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் மனுக்களையும் விளக்கங்களும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் சில நகரங்கள், கிராமங்களில் தரித்து நின்று தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் பரப்புரைகளையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

தாயகச்செய்திகள்