அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை ஒன்றிணையக் கோரிக்கை

எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கத்தை எதிர்க்கும் அனைவரும் ஒன்றிணைவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது கட்சியில் உள்ள அனைவரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை இருக்கும் இடங்களில் இருப்பதாகவும் அந்த கொள்ளையை பின்பற்றியவாறே எதிர்க்கட்சிக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Allgemein