முன்னணியின் மரநடுகை ஆரம்பம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களால் கடந்த 9 மாதங்களாக பதி வைக்கப்பட்டு வளர்த்து எடுக்கப்பட்ட தேசத்தின் மரங்களான வேம்பு , வாகை, ஆல் ஆகிய வகை மரங்கள் காங்கேசன்துறை வீதியின் ஓரமாக நாட்டப்பட்டுள்ளது.
இணுவில் வரையாக முதலாவது கட்டமாக 200 க்கு மேற்பட்ட மரங்கள் நடப்பட்டதுடன் ஆவலுடன் மரம் வேண்டும ;என்று கேட்டவர்களிக்கு 53 மரங்கள் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக பராமரித்து தண்ணீர் பாச்சுவதற்கான வசதிகள் உறுப்பினர்களால் செய்யப்பட்டுள்ளது. இன்றில் இருந்து அந்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னணி அறிவித்துள்ளது.
தாயகச்செய்திகள்