மன்னாரில் 111 மனித எலும்புக் கூடுகள் மீட்பு!

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கையில் குறித்த மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றில் ஏழு மனித எலும்புக்கூடுகள் குழந்தைகளினுடையதென தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் பல உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்று (வியாழக்கிழமை) 61 வது நாளாகவும் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

தாயகச்செய்திகள்