கிளிநொச்சி சடலம்:தனியார் பாதுகாவலர்?

கிளிநொச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.கிளிநொச்சியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் முறிகண்டியை சேர்ந்த பெண்ணொருவரது சடலமேயதுனெ அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லை திருமுருகண்டி வசந்த நகரை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் கருப்பையா நித்தியகலா- வயது 32 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ,கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் வீதியில் உள்ள வயல் கால்வாயில் குறித்த பெண்ணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மீட்டெடுக்கப்பட்ட சடலத்திற்கருகாக மீட்கப்பட்ட இடுப்புபட்டி மற்றும் திறப்பு,பேனைகள் அவருடையதாக இருக்கலாமென தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த பெண் கொலை செய்யப்பட்டே அப்பகுதியில் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
தாயகச்செய்திகள்