August 11, 2022

வெடிக்காத நிலையில் குண்டு! 18 ஆயிரத்து 500 பேர் திடீர் வெளியேற்றம்!

இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்டு வெடிக்காத நிலையில் இருந்த இரண்டு குண்டுகள் ஜெர்மன் நகரம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இந்த குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பிற்காக வௌியேற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜெர்மனியில் உள்ள லுட்விக்‌ஷஃபன் என்ற ஊரில், சுமார் 500 கிலோ எடை கொண்ட குண்டுகள் கட்டட பணியாளர்களால் மீட்கப்பட்டிருந்தன..
இது அமெரிக்காவால் போடப்பட்ட குண்டுகளாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனை அப்புறப்படுத்துவதற்காக அந்த ஊரில் இருந்த 18 ஆயிரத்து 500 பேரை அதிகாரிகள், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வெளியே அனுப்பியிருந்தனர்.
நாஷிகளுக்கு எதிராக போடப்பட்ட குண்டுகள் இன்னமும் வெடிக்காத நிலையில், ஜேர்மனியின் பல பகுதிகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் மண்ணில் புதையுண்டு சிதைவடைந்த குண்டுகளின் புகைப்படங்களை நகர அதிகாரிகள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.