August 11, 2022

மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை,

சுவிட்சர்லாந்தில் மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவனுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில், சிறிலங்காவை பூர்வீகமாக கொண்டு பிரான்ஸ் குடியுரிமை பெற்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெனிவாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
கணவருக்கும்- மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது, எனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொன்று ஆற்றில் வீசியுள்ளார்.
இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், தன்னுடைய மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் தான் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மனைவி விவாகரத்து கேட்டிருந்தும், அதை பரிசீலிக்காமால் பழி வாங்கும் நடவடிக்கையாக திட்டம் போட்டு இந்த கொலையை செய்ததாக தெரிகிறது.
மனைவியை கழுத்தை நெரித்து கொன்று ஆற்றில் வீசிவிட்டு தன்னுடைய குழந்தைகளிடம் ‘அம்மா, கள்ளக் காதலனுடன் ஓடிவிட்டாள்’ என நாடகம் நடத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவருக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து, குற்றவாளியின் வழக்கறிஞரான ஹயாட் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.