58 வது நாளாகவும் தொடரும் மனித எச்சங்களைத் தேடும் பணி

மனித எச்சங்களை தேடி இன்று (திங்கட்கிழமை) 58 வது நாளாகவும் மன்னார் சதொச வளாகத்தில் அகழ்வுப் பணி தொடர்கிறது.
குறித்த அகழ்வு பணி கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலுடன் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மீண்டும் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வருகின்றன.
தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதால், வளாகத்தின் முன்பகுதி முழுவதும் தரப்பால் இடப்பட்டு மூடப்பட்டுள்ளது.
ஆகையால் தற்போது வளாகத்தின் மைய பகுதியிலுள்ள மனித எச்சங்கள் மாத்திரமே மீட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தாயகச்செய்திகள்