வடக்கு – கிழக்கில் பொது வாக்கெடுப்பு! ஐ.நாவை வலியுறுத்தும் வடக்கு மாகாண அரசு

இலங்­கை­யில் ஓர் நிலை­யான அர­சி­யல் தீர்­வைக் காண்­பதை நோக்­கா­கக் கொண்டு, தமிழ் மக்­க­ளின் வேண­வா­வைத் தீர்­மா­னிப்­ப­தற்கு, இலங்­கை­யில் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் ஐ.நா. சபை­யின் கண்­கா­ணிப்­பு­டன் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டும். ஐ.நா. சபை­யின் உறுப்பு நாடு­கள் அதற்கு உதவவேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண அரசு, ஐ.நா. சபை­யைக் கோரும் தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­பட்டுள்­ளது.
வடக்கு மாகாண சபை­யின் 130ஆவது அமர்வு எதிர்­வ­ரும் 30ஆம் திகதி வியா­ழக் கிழமை, கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. சபை­யின் அன்­றைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்ள நிகழ்சி நிர­லி­லேயே மேற்­படி தீர்­மான வரைவு உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.
வடக்கு மாகாண சபை­யின் ஆளும் கட்சி உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­தால் இந்­தத் தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
கடந்த கால ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னங்­கள் மற்­றும் ஐ.நா. சபை­யின் செய­லர் நாய­கத்­தின் பொறுப்­புக் கூறு­த­லுக்­கான அறிக்கை, ஐ.நா.வின் உள்­ளக மீளாய்­வுக் குழு­வின் அறிக்கை ஆகி­ய­வற்றை கவ­னத்­தில் எடுத்­தும்,இலங்­கை­யில் சிங்­கள மற்­றும் தமிழ் மக்­க­ளுக்கு இடை­யி­லான அர­சி­யல் சிக்­க­லா­னது 1948 ஆம் ஆண்டு பெரிய பிரிட்­ட­னி­ட­மி­ருந்து இந்­தத் தீவா­னது சுதந்­தி­ரத்­தைப் பெற்­றுக்­கொண்­ட­தி­லி­ருந்து சீர­ழி­வுக்கு உட்­பட்­டுள்­ள­மை­யும், போரின் மூல கார­ண­மா­கிய அர­சி­யல் சிக்­கல் நிலை­யா­னது பல்­வேறு முயற்;சிக­ளின் பின்­ன­ரும் இது­வ­ரை­யும் தீர்க்­கப்­ப­டா­தை­யும் கவ­னத்­தில் எடுத்து வடக்கு மாகாண அரசு 5 தீர்­மா­னங்­களை எடுக்­க­வேண்­டும் என்று சிவா­ஜி­லிங்­கம் சமர்­பித்­துள்ள தீர்­மான வரை­வில் கூறப்­பட்­டுள்­ளது.
‘இலங்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்­குச் சமத்­து­வ­மான அர­சி­யல் தீர்வை வழங்­கு­வ­தற்கு முடி­யா­மை­யி­னா­லும், விரும்­பா­மை­யி­னா­லும், போருக்­கான மூல கார­ணத்தை சமா­ளிக்­கத் தவ­றி­யுள்­ள­மை­யா­லும் அத்­து­டன் கடந்த கால வன்­மு­றை­யின் மீள் எழு­கை­யைத் தவிர்ப்­ப­தன் பொருட்டு எந்­த­வொரு அர்த்­த­முள்ள முயற்­சி­யை­யும் முன்­னெ­டுப்­ப­தற்­குத் தவ­றி­யுள்­ள­மை­யி­னா­லும், ஓர் நிலை­யான அர­சி­யல்த் தீர்வை காண்­பதை நோக்­கா­கக் கொண்டு தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் வேண­வாக்­க­ளைத் தீர்­மா­னிப்­ப­தன் பொருட்டு அந்­தத் தீவின் வடக்கு மற்­றும் கிழக்கு பிர­தே­சத்­தில் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் கண்­கா­ணிப்­பு­டன் கூடிய பொது வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தற்கு உத­வு­மாறு ஐக்­கிய நாடு­கள் சபை­யின் உறுப்பு நாடு­களை இந்­தச் சபை கோரு­கின்­றது’ என்று 5 தீர்­மா­னங்­க­ளுள் ஒன்­றா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Allgemein