வடகொரியத் தலைவரை நான் மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப்

வடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் என அமொிக்க அதிபர் டொனாட் டிரம்ப் கூறியுள்ளார்.

ரொயிட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

ரொயிட்டர் செய்தி சேவைக்கு அவர் மேலும் கூறுகையில்:-

வடகொரிய தலைவர் கிம் அணு ஆயுதங்களை கைவிடுவாரா, மாட்டாரா என்பதில் பரவலாக சந்தேகங்கள் இருந்தாலும்கூட, அவர் சொன்னபடி அணு ஆயுதங்களை கைவிடும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். வடகொரியாவுடன் பல நல்ல விடயங்கள் நடந்து உள்ளன.

குறிப்பிட்ட விடயத்தில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சீனா உதவிகள் செய்யவில்லை. அமெரிக்காவுடன் சீனாவுக்கு உள்ள வர்த்தக பிரச்சினைகள்தான் இதற்கு காரணம்.

வடகொரியா அணு ஆயுதங்களை சோதிப்பதை தடுத்து நிறுத்தி விட்டேன். அவர்கள் ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதையும் நிறுத்தி உள்ளேன். ஜப்பான் இதைக் கண்டு சிலிர்த்துப்போனது. இனி என்ன நடக்கப்போகிறது? யாருக்கு தெரியும்? நாங்கள் மீண்டும் சந்திக்கப்போகிறோம் என அவ் நேர்காணலில் டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.

உடல் நலம்