அம்மன் கோயிலடியில் இன்று நடந்த சோக சம்பவம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
கொள்ளைக் கும்பலின் தாக்குதலால் காயங்களுக்குள்ளான வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவருகையில்;
இன்று அதிகாலை 4 மணியளவிலேயே குறித்த வீட்டிற்குள் இந்த தாக்குதல் சம்பவமும், திருட்டும் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஊரெழு அம்மன் கோவிலடியில் 77 வயதுடைய வயோதிபரும் 70 வயதுடைய அவரது துணைவியாரும் வசித்து வருகின்றனர்.
அவர்களின் வீட்டுக்குள் இன்று அதிகாலை 4 மணிக்கு 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.
கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த 6 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுத் தம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.